மத்திய அரசின் சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ன் கீழ், கடந்த அக்டோபர் 19 வரை 8.34 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.75 லட்சம் இடங்களில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தற்போது 3.03 மடங்கு அதிகரித்துள்ளது. பழைய பொருட்கள் அகற்றப்பட்டு விற்றப்பட்டதால், ரூ.491 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.305 கோடி வருவாய் கிடைத்தது. மேலும், அலுவலக இடங்களைச் சீரமைத்து 116 லட்சம் சதுர அடி இடம் பயன்பாட்டுக்காக மீட்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, தனது அலுவலகத்தின் ஒரே தளத்தில் 1,200 சதுர அடி இடத்தை மீட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் 4.15 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சகம் பழைய பொருட்களை அகற்றப்பட்டு விற்றப்பட்டதால், ரூ.425 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
நடப்பாண்டு அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் இந்த இயக்கத்தின் மூலம், நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகளைத் தீர்த்தல், பழைய கோப்புகள் மற்றும் மின்னணுக் கழிவுகளை அகற்றுதல், அலுவலக இடங்களை முறையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துறைச் செயலர்களை வலியுறுத்தினார்.