Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியப் பயணத்தை நிறைவு செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

இந்தியப் பயணத்தை நிறைவு செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தைப் பார்வையிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்.

குஜராத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைப் பார்வையிட்ட ரூபியோ, எரிசக்தி மற்றும் வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசினார்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியா–அமெரிக்கா இடையிலான பொருளாதாரக் கூட்டுறவும், எரிசக்திப் பாதுகாப்பு ஒத்துழைப்பும் இரு நாடுகளையும் வலுப்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

மூன்று நாள் இந்தியப் பயணத்தை நேற்று நிறைவு செய்த அவர், பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார, உத்திசார் முன்னுரிமைகளை முன்னெடுத்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். கடந்த 20-ம் தேதி மும்பை வந்த ரூபியோ, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், முதலீடு, எரிசக்திப் பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் இருவரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டையும் ரூபியோ வலியுறுத்தினார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையும் சந்தித்த அவர், அதானி மற்றும் டாடா குழுமங்களின் தொழில் தலைவர்களுடன் வர்த்தகம், முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்தார்.

குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைப் பார்வையிட்ட ரூபியோ, எரிசக்தி மற்றும் வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுடன் பேசினார். அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மும்பையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தார்.

வளமான, பாதுகாப்பான இந்தோ–பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இந்தப் பயணம் மீண்டும் வெளிப்படுத்தியதாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
கூடுதல் ஹால்மார்க் மையங்கள் அமைக்க வலியுறுத்தும் நகை வியாபாரிகள்
அடுத்த செய்தி
தொடர்ந்து 4 நாட்களாக சரிவில் தங்கம் - பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது

தொடர்புடைய செய்திகள்