Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழகத்துக்கு தண்ணீர் உறுதி - முதல்வர் சந்திரபாபு

தமிழகத்துக்கு தண்ணீர் உறுதி - முதல்வர் சந்திரபாபு

முதல்வர் விஜய், கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுவைச் சந்தித்து பேசினார்.

பகிரவும் WhatsApp Facebook

ஒருநாள் பயணமாக ஆந்திரா சென்ற முதல்வர் விஜய், கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுவைச் சந்தித்து பேசினார்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜயவாடா விமான நிலையம் சென்ற தமிழக முதல்வர் விஜய்க்கு, ஆந்திர அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் 30 கி.மீ. தொலைவில் உள்ள கனகதுர்கை அம்மன் கோயிலுக்குச் சென்ற முதல்வர் வழிபாடு செய்தார்.

 
இதனைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் இல்லத்திற்கு சென்ற விஜய்க்கு, சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 
கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் இரு மாநில முதல்வர்கள் மற்ற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீரினைத் திறக்க வேண்டுமென முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

 
தொடர்ந்து விஜயவாடா நகரில், ' விஜயவாடா உத்சவ் 2.0' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய் அங்கு நடந்த கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
தெலங்கு கங்கை திட்டத்தின் கீழ் சென்னைக்கு தேவைப்படும் குடிநீர் குறித்தும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் குறித்தும் ஆக்கப்பூர்வமாக ஆலோசித்துள்ளோம்.

 நடப்பாண்டில் சென்னைக்கு 4.08 டிஎம்சி தண்ணீரை ஆந்திரா வழங்கி உள்ளது. ஆந்திராவுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும், அண்டை மாநிலமான தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை உறுதியாக வழங்குவோம். தண்ணீர் என்பது ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும். மாறாக, மோதலுக்கான காரணமாக இருக்கக்கூடாது.
மத்திய அரசின் ஆதரவுடன் கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகுக்கும். விவசாயத்தை மாற்றியமைக்கவும், தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு செழிப்பை கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்.
ஆந்திரா சென்ற முதல்வர் விஜய்க்கு விமான நிலையம் மற்றும் சாலைமார்க்க பயணத்தின் போது ஏராளமான பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முந்தைய செய்தி
Countries like India not always agree with US-China: Former UK PM Rishi Sunak
அடுத்த செய்தி
Judge blocks Trump’s White House press ban on CNN, MS NOW, Politico

தொடர்புடைய செய்திகள்