Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

யுபிஎஸ்சி தேர்வில் 8956 பேர் தேர்ச்சி - தவறினால் தகுதி ரத்து

யுபிஎஸ்சி தேர்வில் 8956 பேர் தேர்ச்சி - தவறினால் தகுதி ரத்து

எழுத்துத் தேர்வில் 8,956 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த செப்டம்பர் 13-ல் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் (II) எழுத்துத் தேர்வில் 8,956 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இவர்கள் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமிகளில் சேர அடுத்தகட்டத் தேர்வான பாதுகாப்புப் படைகளின் தேர்வு வாரிய (எஸ்எஸ்பி) நேர்முகத் தேர்வில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கான முடிவுகளை யுபிஎஸ்சி திங்கள்கிழமை வெளியிட்டது.

தேர்ச்சி பெற்றவர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரளம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமி, ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமி, சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமி ஆகியவற்றில் சேர நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கு அடுத்தாண்டு ஜூலை 1-க்குள்ளும், விமானப்படை அகாடமிக்கு மே 13-க்குள்ளும், அதிகாரிகள் பயிற்சி அகாடமிக்கு அக்டோபர் 1-க்குள்ளும் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் அவர்களின் தகுதி ரத்து செய்யப்படும்.

ராணுவத்தை முதல் விருப்பமாகத் தேர்வு செய்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புத் தகவல்களைப் பெற www.joinindianarmy.nic.in இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். முடிவு வெளியான 15 நாள்களுக்குள் மதிப்பெண் பட்டியல் www.upsconline.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும்.
முந்தைய செய்தி
பிடெக் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்
அடுத்த செய்தி
Weekly special trains via Tamil Nadu

தொடர்புடைய செய்திகள்