Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காலாண்டில் 1 லட்சத்தைக் கடந்த வீடுகள் விற்பனை

காலாண்டில் 1 லட்சத்தைக் கடந்த வீடுகள் விற்பனை

7 நகரங்களில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 1,00,220 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நாட்டின் முக்கிய 7 நகரங்களில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 1,00,220 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 97,080 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது என அனராக் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடுகள் விற்பனை மதிப்பு 2 சதவீதம் உயர்ந்து ரூ.1.55 லட்சம் கோடியாகியுள்ளது.


நகரங்களுக்கிடையே விற்பனை நிலவரத்தில் மாறுபாடு காணப்பட்டது. மும்பை பெருநகரப் பகுதியில் (எம்எம்ஆர்) விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 31,750 யூனிட்டுகளாகவும், பெங்களூருவில் 12 சதவீதம் உயர்ந்து 16,670 யூனிட்டுகளாகவும் இருந்தது. ஹைதராபாதில் விற்பனை 15 சதவீதம் அதிகரித்து 12,970 யூனிட்டுகளாக உயர்ந்தது. எம்எம்ஆர் மற்றும் பெங்களூரு இணைந்து 7 நகரங்களின் மொத்த விற்பனையில் 48 சதவீதம் பங்களித்துள்ளன.

மாறாக, புனேயில் வீடுகள் விற்பனை 6 சதவீதம் குறைந்து 15,690 யூனிட்டுகளாகவும், டெல்லி-என்சிஆரில் 1 சதவீதம் குறைந்து 13,765 யூனிட்டுகளாகவும் இருந்தது. சென்னையில் 10 சதவீதம் குறைந்து 5,395 யூனிட்டுகளாகவும், கொல்கத்தாவில் 4 சதவீதம் குறைந்து 3,980 யூனிட்டுகளாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, 7 நகரங்களிலும் குடியிருப்புகளின் சராசரி விலை ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீதம் உயர்ந்துள்ளது. டெல்லி-என்சிஆரில் அதிகபட்சமாக 12 சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. வீடுகளின் கையிருப்பும் 12 சதவீதம் அதிகரித்து சுமார் 6.31 லட்சம் யூனிட்டுகளாகியுள்ளது.

புதிய குடியிருப்பு திட்டங்களின் அறிமுகம் 18 சதவீதம் அதிகரித்து 1,14,320 யூனிட்டுகளாகியுள்ளது. ரூ.80 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரையிலான வீடுகள் புதிய விநியோகத்தில் 34 சதவீதம் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளன. ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரையிலான வீடுகள் 24 சதவீதம் பங்களித்துள்ளன.
முந்தைய செய்தி
ரூ.31,000 கோடியை கடந்தது எஸ்ஐஎஃப் சொத்து
அடுத்த செய்தி
ஜவுளி நிறுவனங்களின் பசுமை முதலீடுகளுக்கு நிதியுதவி! ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கிய முடிவு

தொடர்புடைய செய்திகள்