நடுத்தர குடும்பங்களின் சமையலறை செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களின் அன்றாட சேமிப்பு பெருமளவு கரைந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கம் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 108 சதவீதம் வரை உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. அதாவது வெங்காயத்தின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதுதவிர, இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை போன்ற அன்றாட சமையலுக்குத் தேவையான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் இந்த உணவுப் பணவீக்கத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் உணவுப் பணவீக்கம் 7.18 சதவீதமாக உள்ள நிலையில், கிராமப்புறங்களில் இது 8.06 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலக அளவில் தானிய உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட புதிய அறுவடை வரத்து சந்தைக்கு வரும் வரை, உணவுப் பொருட்களின் விலையில் நிலவும் இந்த நிச்சயமற்ற சூழல் தொடரும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்க விவரங்கள் விவரம் சதவீதம்
ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கம் 7.74 சதவீதம்
கிராமப்புற உ 8.06 சதவீதம்
நகர்ப்புற உணவுப் பணவீக்கம் 7.18 சதவீதம்
முக்கியப் பொருட்களின் விலை உயர்வு (கடந்த ஓராண்டில்):
உணவுப் பொருள் விலை உயர்வு (%)
வெங்காயம் 108 சதவீதம்
இஞ்சி 62 சதவீதம்
பூண்டு 54 சதவீதம்
எலுமிச்சை 36 சதவீதம்