ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 743 கிராம ஊராட்சிகளில் நிர்வாகத்தை கவனிக்க தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 743 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, அடுத்தாண்டு ஏப்.19 ம் தேதி வரையில் அந்தந்த ஊராட்சிகளின் நிர்வாகத்தை கவனிக்கும் வகையில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளும், ராணிப்பேட்டையில் 288 கிராம ஊராட்சிகளும், திருப்பத்தூரில் 208 கிராம ஊராட்சிகளுக்கும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2027ம் ஆண்டு ஏப்.19 ம் தேதி வரை தனி அலுவலர்களாக இருந்து கிராம மக்களின் கோரிக்கைகள், தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தனி அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது கிராம ஊராட்சி தனி அலுவலராக, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து பணிகளையும் செய்ய முடியாது என்பதால் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் அறையும் பூட்டப்பட்டது.