மும்பை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதையடுத்து, நயாரா எனர்ஜி நிறுவனம் தனது எரிபொருள் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் எரிபொருள் விநியோக நிறுவனமான நயாரா எனர்ஜி, நாடு முழுவதும் உள்ள தனது பங்குகளின் மூலம் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை உயர்வு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினங்கள் அதிகரித்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, தனியார் பங்குகளை நம்பியிருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.