Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு - 1 கிலோ எவ்வளவு தெரியுமா?

எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு - 1 கிலோ எவ்வளவு தெரியுமா?

எலுமிச்சை கிலோ ரூ.255 முதல் ரூ.300 வரை திருச்சியில் விற்பனை செய்யப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி:

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் எலுமிச்சை கிலோ ரூ.255 முதல் ரூ.300 வரை திருச்சியில் விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தென்காசி, திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், லால்குடி, பூவாளூர், புள்ளம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த திருச்சி மார்க்கெட்டுக்கு சுமார் 10 டன் எலுமிச்சை விற்பனைக்கு வருகிறது. திருச்சி பகுதியில், வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மக்கள் எலுமிச்சை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் எலுமிச்சை கிலோ ரூ.255 முதல் ரூ. 300 வரை விற்பனை ஆகிறது.

ஒரு கிலோவுக்கு 15 முதல் 17 பழங்கள் வரை மட்டுமே எடை நிற்கின்றன. சில்லறையில் தனியாக அளவில் பெரிய பழங்கள் ரூ.15 க்கும், சிறிய அளவிலான பழங்கள் ரூ.10க்கும் விற்பனையானது.

'வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும், விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.270 முதல் ரூ.275 வரை விற்பனையானது' என்று வியாபாரி குணசேகரன் தெரிவித்தார்.
முந்தைய செய்தி
பசுமை எரிசக்தி வழித்தட திட்டம்: 3 நிறுவனங்களுக்கு ரூ.23,500 கோடி ஒப்பந்த வாய்ப்பு
அடுத்த செய்தி
எகிறிய தக்காளி, வெங்காயம் விலை - மக்கள் அவதி

தொடர்புடைய செய்திகள்