Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அருவிகளில் ஆர்ப்பரிக்கும் நீர் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

அருவிகளில் ஆர்ப்பரிக்கும் நீர் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொல்லிமலையில் உள்ள அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கொல்லிமலையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை உள்ளது. ஆயுத பூஜை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனர்.


நம் அருவி, மாசிலா அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடினர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை காட்சிமுனை, அறப்பளீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தலைமலையில் ஹெலிகாப்டர் இறங்குதளம்

 
நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் 2700 அடி உயரத்தில் தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளதால் காட்டுப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். 

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு டோலி, குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வரும் தலைமலை சேவா அறக்கட்டளையினரை பாராட்டி எருமப்பட்டியில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் எம்பி விஎஸ். மாதேஸ்வரன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

 
அப்போது அவர் பேசுகையில், தலைமலை கோயிலுக்கு மலை பாதை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் முதியோர் எளிதாகதரிசனம் செய்ய வசதியாக அரசு அனுமதியுடன் மலை மீது ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

முந்தைய செய்தி
Weekly special trains via Tamil Nadu
அடுத்த செய்தி
’கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’

தொடர்புடைய செய்திகள்