சென்னை:
ஜியோவின் 10-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 2ஜி செல்போன் பயன்படுத்துபவர்கள் 4ஜி சேவைக்கு மாறும் வகையில் ஜியோபாரத் போனுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கால சலுகையில், ஜியோபாரத் 4ஜி போன் ரூ.1,499-க்கு வழங்கப்படுகிறது. இதனுடன் 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படுகிறது. இதில் மாதந்தோறும் 14 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஜியோவின் கணக்குப்படி, வழக்கமாக 2ஜி பயனாளர்கள் மாதம் சுமார் ரூ.199 ரீசார்ஜ் செய்கின்றனர். 6 மாதங்களுக்கான ரீசார்ஜ் செலவு சுமார் ரூ.1,200 ஆகும். இந்தத் தொகையை கணக்கில் எடுத்தால், சலுகையில் வழங்கப்படும் போனின் விலை ரூ.299 ஆகிறது என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ஜியோபாரத் போன் மூலம் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டுமின்றி பல்வேறு டிஜிட்டல் சேவைகளையும் பயன்படுத்தலாம். ஜியோ டிவி மூலம் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் கிரிக்கெட், திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
மேலும், ஜியோபே மூலம் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்யவும், பணம் செலுத்தியதற்கான அறிவிப்புகளைப் பெறவும் முடியும். ஜியோபாரத் போனில் 2.4 அங்குல திரை, 2,000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 4ஜி இணைப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பாதுகாப்பான அழைப்பு மற்றும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
2ஜி பயனாளர்கள் 4ஜிக்கு மாறுவதற்கு இந்தச் சலுகை உதவும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.