சென்னை:
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை(அக்.4) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் (அக்.5) கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.