Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏர்டெல்லில் புதிய போஸ்ட்பெய்டு திட்டம் - இதுவும் இலவசமாம்..

ஏர்டெல்லில் புதிய போஸ்ட்பெய்டு திட்டம் - இதுவும் இலவசமாம்..

ஆண்டுக்கு ஒரு முறை இலவச சர்வதேச ரோமிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஏர்டெல் நிறுவனம், தனது புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச சர்வதேச ரோமிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது இந்திய மொபைல் எண்ணிலேயே அழைப்பு, குறுஞ்செய்தி (SMS), டேட்டா சேவைகளைப் பயன்படுத்த முடியும். இந்த புதிய திட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


இலவச சர்வதேச ரோமிங் சலுகையில் 5 ஜிபி டேட்டா, 60 நிமிட அழைப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும். இந்தச் சலுகை 5 நாட்களுக்கு செல்லுபடியாகும். பயணிக்கும் நேரத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் இந்த 5 நாள் ரோமிங் சலுகையை செயல்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஃபேமிலி பேக்கில் இடம்பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு ஒரு இலவச சர்வதேச ரோமிங் பயணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.499 தனிநபர் திட்டம், ரூ.749 முதல் ரூ.1,799 வரையிலான ஃபேமிலி பேக் என மொத்தம் 6 புதிய திட்டங்களை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
மக்களே கவனம் - வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு!
அடுத்த செய்தி
US trade deficit widens to $105.6 billion in August

தொடர்புடைய செய்திகள்