வைகை அணை விரைவில் தூர்வாரப்படும் என அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தேனி ஆட்சியர் அலுவலகத்தில் 1,960 பயனாளிகளுக்கு ரூ 26.45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: தேனி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வைகை அணை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
வைகை அணை கட்டப்பட்டதில் இருந்து தூர் வார இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் முதல்முறையாக வைகை அணையைத் தூர்வாரி, விவசாயிகளுக்கு உதவுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பெரியகுளம் எம்எல்ஏ க.சபரி ஐங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.