Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இடைத்தேர்தலே அறிவிக்கவில்லை - விராலிமலையில் களத்தில் இறங்கிய தவெகவினர்!

இடைத்தேர்தலே அறிவிக்கவில்லை - விராலிமலையில் களத்தில் இறங்கிய தவெகவினர்!
விராலிமலை தொகுதிக்குட்பட்ட மாத்தூரில் சின்னம் வரையும் பணியில் தவெகவினர்.

மாத்தூர், பேராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் சுவர்களில் சின்னம் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தவெகவினர் தேர்தல் முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளில் தவெகவுக்குக் கிடைத்த வெற்றிகளால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்தகட்டமாக காலியாக உள்ள தொகுதிகளிலும் வெற்றிபெறும் நோக்கில் தேர்தல் முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, விராலிமலையில் தவெகவினர் சின்னம் வரையும் பணிகளில் ஈடுபடுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இத்தகைய பணிகள் நடைபெறுவது, தொகுதியில் அரசியல் போட்டிக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி, அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார். இதனால் இத்தொகுதி காலியாக உள்ளது.

இந்நிலையில், மாத்தூர், பேராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் சுவர்களில் சின்னம் வரையும் பணிகள் நடைபெறுவது, இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் தவெகவினரின் முன்னேற்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



முந்தைய செய்தி
தீபாவளி பண்டிகை - திருச்சி டூ சிங்கப்பூருக்கு கூடுதல் விமானங்கள்
அடுத்த செய்தி
சவப்பெட்டிக்குள் அசைவு - கண்விழித்த 15 வயது சிறுமி

தொடர்புடைய செய்திகள்