Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சவப்பெட்டிக்குள் அசைவு - கண்விழித்த 15 வயது சிறுமி

சவப்பெட்டிக்குள் அசைவு - கண்விழித்த 15 வயது சிறுமி

15 வயது சிறுமி, அஞ்சலி நிகழ்வின்போது சவப்பெட்டிக்குள் கண்விழித்து எழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

குவாத்தமாலாவில் இறந்துவிட்டதாகக் குடும்பத்தினர் கருதிய 15 வயது சிறுமி, அஞ்சலி நிகழ்வின்போது சவப்பெட்டிக்குள் கண்விழித்து எழுந்த சம்பவம், துயரத்தில் மூழ்கியிருந்த உறவினர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.

குவாத்தமாலாவின் கீச்சே மாகாணத்திலுள்ள எல் ஜோகோட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் யுலெய்டி இக்ஸ்கோடோயாக் (15). கடந்த 10-ம் தேதி அதிகாலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை, தந்தை ஆபிரகாம் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றார்.


வழியில் சிறுமி சுயநினைவை இழந்ததாகவும், மூச்சும், நாடித்துடிப்பும் தனக்குத் தெரியவில்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார். மகள் இறந்துவிட்டதாகக் கருதிய அவர், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.
உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் வீட்டில் திரண்டிருந்தனர். 

சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு, சவப்பெட்டியின் மீது சாய்ந்து அழுதுகொண்டிருந்த தாய், உள்ளே அசைவு இருப்பதைக் கவனித்துள்ளார். பெட்டியைத் திறந்தபோது யுலெய்டி கண்விழித்து எழுந்து அமர்ந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமி வெளியே வர உதவினர்; தண்ணீரும் கொடுத்தனர். அழுகை நிறைந்திருந்த வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவின. இந்தக் காட்சியின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

 
சம்பவத்துக்குப் பிறகு பேசிய யுலெய்டி, நெஞ்சில் கடுமையான வலியும், கனத்த உணர்வும் ஏற்பட்டதாகவும், அதன்பின்னர் மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மகளை இழந்ததாக எண்ணிய குடும்பத்தினர், அவர் மீண்டும் உயிர்த்து வந்த்தை கொண்டாடினர்.

முந்தைய செய்தி
இடைத்தேர்தலே அறிவிக்கவில்லை - விராலிமலையில் களத்தில் இறங்கிய தவெகவினர்!
அடுத்த செய்தி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

தொடர்புடைய செய்திகள்