Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய நுழைவுக் கட்டணம் உயர்வு - வலுக்கும் எதிர்ப்பு

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய நுழைவுக் கட்டணம் உயர்வு - வலுக்கும் எதிர்ப்பு

கோயம்பேட்டில் 6.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நுழைவுக் கட்டணம் ரூ.500-ஆக உயர்த்தப்பட்டதற்குப் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி முதல்வருக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


கோயம்பேட்டில் 6.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதன் பராமரிப்புப் பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை இப்பேருந்து நிலையத்தில் 24 மணி நேரத்திற்கான நுழைவுக் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் இக்கட்டணம் ரூ.500-ஆக உயர்த்தப்படுவதாக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்த திடீர் கட்டண உயர்வு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“எரிபொருள் விலை ஏற்றம், சாலை வரி, வாகனக் காப்பீடு, சுங்கக் கட்டணம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளால் பேருந்து உரிமையாளர்கள் ஏற்கெனவே பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலைய நுழைவுக் கட்டணமும் ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுவது எங்கள் மீது மேலும் சுமையை அதிகரிக்கும். எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்த நுழைவுக் கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி
சம்பா சாகுபடியும் சாத்தியமில்லை: டெல்டா மாவட்டங்களில் நீரின்றி கருகும் குறுவைப் பயிர்கள்
அடுத்த செய்தி
Azhagar temple offerings exceed ₹46 lakhs

தொடர்புடைய செய்திகள்