Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியன் வங்கி சார்பில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

இந்தியன் வங்கி சார்பில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான வினோத்குமார் உள்ளிட்டோர்

வங்கியின் செயல் இயக்குநர்கள் சிவ் பஜ்ரங் சிங், மினி டி.எம். உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் , ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

இணையவழி மோசடிகளை எதிர்கொள்வதில் அனைவரின் கூட்டுப் பொறுப்பையும் வலியுறுத்தும் வகையில், பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி சார்பில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இணைய பாதுகாப்பு மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பான டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் இணையவழி மோசடிகளைத் தடுப்பது குறித்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியன் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே நடைபெற்ற பேரணியை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பினோத் குமார் தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வில், வங்கியின் செயல் இயக்குநர்கள் சிவ் பஜ்ரங் சிங், மினி டி.எம். உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் , ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பினோத் குமார் பேசும்போது, "டிஜிட்டல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பான வங்கிச் சேவைகளை ஊக்குவிப்பதற்கும் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், விழிப்புடனான செயல்பாடுகளும் மிகவும் அவசியம்" என்றார்.

மேலும், சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கி ஊழியர்களுக்கான விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

முந்தைய செய்தி
US itself buying diesel from Russia: Former diplomat Fabian
அடுத்த செய்தி
Trump waives tariffs on Russian oil buyers

தொடர்புடைய செய்திகள்