Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி: சென்னையில் சொகுசு வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்

ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி: சென்னையில் சொகுசு வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்

ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான சொகுசு வீடுகளின் விற்பனை வியக்கத்தக்க வகையில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வீடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு வீடுகளை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரபல ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'நைட் ஃபிராங்க்' வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான சொகுசு வீடுகளின் விற்பனை வியக்கத்தக்க வகையில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.

நைட் ஃபிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சென்னையில் மொத்தம் 13,871 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 2 சதவீதம் அதிகமாகும். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் 9 மாதங்களில் சென்னையில் பதிவான அதிகபட்ச விற்பனை இது என குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ள அதேசமயம், சென்னையில் புதிய வீடுகளின் கட்டுமான அறிமுகம் 7 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்னையில் ஒரு சதுர அடியின் சராசரி விலை 5.9 சதவீதம் உயர்ந்து ரூ.7,715-ஆக உள்ளது. மேலும், கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாமல் உள்ள வீடுகளின் இருப்பு 4.4 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் மிகக் குறைந்த அளவில் விற்கப்படாத வீடுகளைக் கொண்ட இரண்டாவது நகரமாகச் சென்னை உருவெடுத்துள்ளது. இது சந்தையில் வீடுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதையே காட்டுகிறது.

குறைந்த விலை வீடுகளை விட, விசாலமான மற்றும் விலை உயர்ந்த வீடுகளை வாங்குவதிலேயே சென்னை மக்களின் கவனம் திரும்பியுள்ளது இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. குறிப்பாக, ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகளின் விற்பனை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்த விற்பனையில் 34 சதவீதமாக இருந்த இவற்றின் பங்கு, தற்போது 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இதில், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான சொகுசு வீடுகளின் விற்பனை வியக்கத்தக்க வகையில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் முக்கிய 8 நகரங்களில் ஒட்டுமொத்த வீடுகள் விற்பனை எந்தவித வளர்ச்சியுமின்றி மந்தநிலையில் காணப்பட்டாலும், சென்னை மற்றும் பெங்களூரு போன்ற தென்னிந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 


முந்தைய செய்தி
Govt urged to support in-house testing facilities at export units
அடுத்த செய்தி
Elephant camp opens to public

தொடர்புடைய செய்திகள்