Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

95 அம்ச வழிகாட்டுதல் பட்டியல்: 417 பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை

95 அம்ச வழிகாட்டுதல் பட்டியல்: 417 பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகள்

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் 417 பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மாநகராட்சியின் 'பாலினக் கொள்கைக் கூடம்' சார்பில் விரிவான பாதுகாப்புத் தணிக்கைப் பணிகள் செய்யப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook


சென்னை மாநகராட்சியின் சில பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது, மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியேற்றப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த மாதம் பாதுகாப்பு உள்கட்டமைப்பு தணிக்கைப் பணி தொடங்கப்பட்டது.

இது குறித்து பாலின கொள்கை கூட தலைவர் லெஜிஸ் கூறியதாவது: மாணவ-மாணவிகளின் உளவியல், உடல்சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வில் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிங்கப்பெண் சிறப்பு படை ஆகியன இணைந்து நடத்தப்படுகிறது.
 
பள்ளிக் கட்டிடங்களின் உறுதித்தன்மை, வகுப்பறைகளின் காற்றோட்ட வசதி, மின் இணைப்புகளின் பாதுகாப்பு, சாய்வுதளம், கைப்பிடிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கழிப்பறை சுகாதாரம், விளையாட்டு உபகரணங்கள், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் செயல்பாடு உள்ளிட்ட 95 அம்ச வழிகாட்டுதல் பட்டியலின்படி தணிக்கை நடத்தப்படுகிறது. மேலும், பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் முறையாக இயங்குதல், பெண்கள் உதவி எண், அவசர தொடர்பு எண்கள் பார்வைக்கு வைக்குப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் இவ்வாறு லெஜிஸ் கூறினார்.
முந்தைய செய்தி
பெருமழை பாதிப்புக்கு ‘குட் பை’ - வருகிறது ‘ரெயின் சென்னை’ ஒப்பந்தம்
அடுத்த செய்தி
ஊழலற்ற அரசியலே தவெக அரசின் பலம்: துரை வைகோ

தொடர்புடைய செய்திகள்