Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஊழலற்ற அரசியலே தவெக அரசின் பலம்: துரை வைகோ

ஊழலற்ற அரசியலே தவெக அரசின் பலம்: துரை வைகோ
வைகோ - விஜய் - துரை வைகோ

”ஊழலற்ற அரசியலே தவெக அரசின் பலமாக உள்ளது. இடைத்தேர்தலில் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறுவது அவதூறு குற்றச்சாட்டு” என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்துவதும், அவர்களை பேசச் சொல்வதும் ஏற்புடையதல்ல. தனிமனிதத் தாக்குதல்கள், ஆபாசப் பேச்சுக்கள் மற்றும் உருவக்கேலி போன்ற செயல்களில் திமுக தலைவர்கள் ஈடுபடுவது வேதனைக்குரியது. தவெக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அடிப்படையற்றது. 


ஊழலற்ற அரசியலே அவர்களின் பலம். இடைத்தேர்தலில் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறுவது அவதூறு குற்றச்சாட்டு. இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும். அவர்கள் டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'இண்டியா' கூட்டணியில் தவெக இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராக வரும் 6-ம் தேதி டெல்லியில் 'இண்டியா' கூட்டணி எம்.பி.க்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம்” எனத் தெரிவித்தார்.


முந்தைய செய்தி
95 அம்ச வழிகாட்டுதல் பட்டியல்: 417 பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை
அடுத்த செய்தி
விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்க - அரசுக்கு கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்