Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

60 அடிக்கு கீழே சரிந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

60 அடிக்கு கீழே சரிந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

அணைக்கு வரும் நீரின் அளவை விட டெல்டா பாசனத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே சரிந்திருப்பது டெல்டா பகுதி விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. அதே நேரத்தில், அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை மாலை 6 மணி முதல் 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடம் இருந்து தேவை குறைந்ததைத் தொடர்ந்து நீர் திற்பபு அளவு குறைக்கப்பட்டதாக நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றம் மற்றும் எல்நினோ தாக்கம் காரணமாக நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், மேட்டூர் அணையில் இருந்து வழக்கத்திற்கு மாறாக தாமதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவை விட டெல்டா பாசனத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.580 அடியாகவும், நீர் இருப்பு 24,375 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 787 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. 


தொடர்ந்து மாலை 4 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் சரிந்து 59.135 அடியாகவும், நீர் இருப்பு 24,046 மில்லியன் கன அடியாகவும் குறைந்தது. மாலை நேரத்தில் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 696 கன அடியாக குறைந்ததால் நதிப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.


முந்தைய செய்தி
ரயில்வே சரக்கு போக்குவரத்தில் 6.14% வளர்ச்சி
அடுத்த செய்தி
Additional Pooja Festival Special Trains

தொடர்புடைய செய்திகள்