Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தாராபுரத்தில் நாதக வேட்பாளர் உள்பட 10 பேர் கைது

தாராபுரத்தில் நாதக வேட்பாளர் உள்பட 10 பேர் கைது

இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக முதல்வர் பிரச்சாரத்துக்காக சென்ற பாதையில் கார்த்திகா தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுவது உட்பட நான்கு சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட மோதல்

தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில், நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி அக்கட்சியினர் தாராபுரம் காவல் நிலையம் முன்பு திரண்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக முதல்வர் பிரச்சாரத்துக்காக சென்ற பாதையில் கார்த்திகா தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுவது உட்பட நான்கு சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறி, நாதக மாநில மகளிர் அணிச் செயலாளர் கார்த்திகா, அவரது கணவர் முருகச்சந்திரகுமார், மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தாராபுரம் காவல் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால், அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நாதக வேட்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூகவலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.
முந்தைய செய்தி
ஹவுதி தாக்குதலில் ஏமன் ராணுவவீரர்கள் 73 பேர் உயிரிழப்பு
அடுத்த செய்தி
இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவது சரியான அணுகுமுறை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

தொடர்புடைய செய்திகள்