ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 ராணுவவீரர்கள் உயிரிழந்தததாகவும் மேலும் பலரை தேடி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திங்களன்று ஏமனின் தெற்குப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அந்த முகாமில் இளம் ராணுவவீரர்கள் சுமார் 200 பேர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரை தேடி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலுக்கு முன்னதாக ஹவுதி முகாம்கள் மீது 3 பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று சவூதிஅரேபியாவின் வடக்கு ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச வ ிமான நிலையத்தில் பயங்க வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. தங்கள் மீது ஹவுதிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.