Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

IDBI வங்கியின் 60.72 சதவீத பங்குகளை விற்க அரசு ஒப்புதல்

IDBI வங்கியின் 60.72 சதவீத பங்குகளை விற்க அரசு ஒப்புதல்

ரூ.52,878 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை, கனடாவைச் சேர்ந்த பேர்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.52,878 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்ஐசி இணைந்து வைத்துள்ள 60.72 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய உள்ளன. மத்திய அரசு தனது 30.48 சதவீதப் பங்குகளையும், எல்ஐசி தனது 30.24 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்யும். இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு பங்கை ரூ.81 என்ற விலையில் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. பங்குகள் விற்பனைக்குப் பிறகும் மத்திய அரசும் எல்ஐசியும் இணைந்து, ஐடிபிஐ வங்கியில் 34 சதவீதப் பங்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும். தொழில்முனைவோரின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டு மூலதனத்தை வழங்கக்கூடிய நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்பிஐ ஒப்புதல் அவசியம்

மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறைச் (டிஐபிஏஎம்) செயலர் அருணிஷ் சாவ்லா கூறியதாவது: ஐடிபிஐ வங்கியை வாங்க அனுமதி பெற்றுள்ள கனடா இன்க் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் சார்பில், ரிசர்வ் வங்கியின் தகுதி மதிப்பீட்டுக்கு உட்பட வேண்டும். மேலும், ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செயல்திட்டத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பங்கு விற்பனைக்கான ஒப்பந்தம் நடப்பாண்டின் இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகை 3 ஆண்டுக்கு லாக் - இன் காலமாக இருக்கும். மேலும், ஐடிபிஐ வங்கி தனது தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படும். ஐடிபிஐ வங்கியுடன் தொடர்புடைய நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே கத்தோலிக் சிரியன் வங்கியிலும் பங்கு வைத்திருப்பதால், ஐடிபிஐ வங்கியுடன் சிஎஸ்பி வங்கியை இணைப்பதா அல்லது சிஎஸ்பி வங்கியில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்வதா என்பதை, பங்கு கொள்முதல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவு செய்ய வேண்டும்.


ஐடிபிஐ கடந்து வந்த பாதை

1964: தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் வளர்ச்சி நிதி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது.
2004: வளர்ச்சி நிதி நிறுவனத்திலிருந்து வணிக வங்கியாக மாற்றப்பட்டது.
2010–2020: மத்திய அரசு ரூ.25,000 கோடி மூலதன உதவி வழங்கியது. எல்ஐசி-யும் உதவியது.
2017 மே 5: வாராக்கடன்கள் மற்றும் இழப்புகள் அதிகரித்ததால் ஐடிபிஐ-யை உடனடி சீர்திருத்த நடவடிக்கை (PCA) கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்தது ஆர்பிஐ.
2018 செப்டம்பர்: வங்கியின் மொத்த வாராக்கடன் 31.78%, நிகர வாராக்கடன் 17.30%-ஆக உயர்ந்தது. மூலதனப் போதுமான விகிதம் 6.22 சதவீதமாக இருந்தது.
2019 ஜனவரி 21: ஐடிபிஐ வங்கியைத் தனியார் துறை வங்கியாக ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியது. அரசின் பங்கு 51 சதவீதத்துக்குக் கீழ் இருந்த நிலையில், வங்கியின் வகைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
2021, மார்ச் 10: ரிசர்வ் வங்கி உடனடி சீர்திருத்த நடவடிக்கை கட்டுப்பாடுகளை நிபந்தனைகளுடன் நீக்கியது.
2022: மத்திய அரசு மற்றும் எல்ஐசி வைத்துள்ள பெரும்பான்மைப் பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கை தொடங்கியது.
2026 மார்ச்: வங்கியின் சொத்து தரம் கணிசமாக மேம்பட்டது. மொத்த வாராக்கடன் 2.32 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.15 சதவீதமாகவும் குறைந்தது. மூலதனப் போதுமான விகிதம் 26.65 சதவீதமாக உயர்ந்தது.
2026, அக்டோபர்: 60.72 சதவீதப் பங்குகளை ரூ.52,878 கோடிக்கு வாங்குவதற்கு கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
முந்தைய செய்தி
Jio Platforms ஐபிஓ அக். 21-ம் தேதி தொடக்கம்
அடுத்த செய்தி
"டெல்லி போராட்டம் தொடர்பான வதந்திக்கு பின்னால் பாக்.,"

தொடர்புடைய செய்திகள்