மகாராஷ்டிரா மின்விநியோக நிறுவனத்திடமிருந்து ரூ.615.76 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தை ஸ்வஸ்திகா இன்ஃப்ரா நிறுவனம் பெற்றுள்ளது.
இதன்படி, புதிய துணை மின்நிலையங்கள் அமைத்தல், உயர் மற்றும் குறைந்த மின்னழுத்த மின்பாதைகள், மின்மாற்றிகள் நிறுவுதல், நிலத்தடி மின்கம்பிகள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பழைய மின்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல், புவியியல் தகவல் அமைப்பு மூலம் வரைபடமாக்குதல், மின்சாதனங்களை அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தப் பணிகளை 24 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.