Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Fusion CX ஐபிஓ 14-ம் தேதி தொடக்கம்

Fusion CX ஐபிஓ 14-ம் தேதி தொடக்கம்

முக்கிய முதலீட்டாளர்கள் அக்டோபர் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் ஃபியூஷன் சிஎக்ஸ் நிறுவனம், ரூ.702 கோடி திரட்டுவதற்கான ஐபிஓ பங்கு விலையை ரூ.275 முதல் ரூ.289 வரை நிர்ணயித்துள்ளது.

இந்தப் பங்கு வெளியீடு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி நிறைவடைகிறது. முக்கிய முதலீட்டாளர்கள் அக்டோபர் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
மொத்த வெளியீட்டில் ரூ.500 கோடிக்கு புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. ஏற்கெனவே உள்ள பங்குதாரர்கள் ரூ.202 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்கின்றனர்.


புதிய பங்கு வெளியீட்டில் கிடைக்கும் தொகையில் ரூ.275 கோடி கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், ரூ.61 கோடி தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும்.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், 13 நாடுகளில் 40 சேவை மையங்களுடன் செயல்படுகிறது. மொத்தம் 13,735 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


2025–26 நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.169 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.74.40 கோடியாக இருந்தது. வருவாய் 37 சதவீதம் அதிகரித்து ரூ.1,818 கோடியாக உயர்ந்துள்ளது.


இந்தப் பங்குகள் அக்டோபர் 22-ம் தேதி என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
சலுகை விலையில் பெட்ரோல் விற்பனை - எங்கு தெரியுமா?
அடுத்த செய்தி
ஸ்வஸ்திகா இன்ஃப்ராவுக்கு ரூ.615 கோடி ஆர்டர்

தொடர்புடைய செய்திகள்