Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாட்ஸ்அப் பங்கு டிப்ஸை நம்ப வேண்டாம்

வாட்ஸ்அப் பங்கு டிப்ஸை நம்ப வேண்டாம்

முதலீடு மற்றும் வர்த்தகக் கணக்கு விவரங்களையும் பகிரக் கூடாது.

பகிரவும் WhatsApp Facebook

வாட்ஸ்அப் குழுக்களில் வரும் பங்கு முதலீட்டு ஆலோசனைகளை நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்று செபி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக செபி வெளியிட்ட அறிக்கையில், ‘‘பதிவு பெறாத சிலர் தங்களைச் சந்தை நிபுணர்களாகக் காட்டிக்கொண்டு, இலவச முதலீட்டுக் கல்வி என்ற பெயரில் பங்குகளை வாங்கவும், விற்கவும் பரிந்துரைக்கின்றனர்.


இந்தக் குழுக்களில் சிலர், தங்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாக பொய்யான தகவல்களைப் பகிர்கின்றனர். குழுவை நடத்துபவர்களை பாராட்டியும் பதிவிடுகின்றனர். இதனால் மற்றவர்களும் நம்பி முதலீடு செய்யும் நிலை உருவாகிறது.


அதிகாரிகளின் நடவடிக்கையால் குழு முடக்கப்பட்டால், புதிய எண்ணிலிருந்து மற்றொரு குழுவில் சேர அழைப்பு வரலாம். இதையும் மோசடியின் அறிகுறியாகக் கருத வேண்டும்,’’ என்று செபி கூறியுள்ளது.


அறிமுகமில்லாதவர்கள் நடத்தும் குழுக்களில் சேருவதையும், அவர்கள் பரிந்துரைக்கும் செயலிகளில் கணக்கு தொடங்கி பணம் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும். முதலீடு மற்றும் வர்த்தகக் கணக்கு விவரங்களையும் பகிரக் கூடாது.


செபியில் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும். அவற்றின் பதிவு விவரங்களையும் செயலிகளின் உண்மைத்தன்மையையும் செபியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.


குறிப்பாக, வெளிநாட்டு எண்களில் இயங்கும் குழுக்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். மற்ற உறுப்பினர்கள் பகிரும் லாபச் செய்திகள், பாராட்டுகள், வர்த்தக உறுதிப்படுத்தல்கள் ஆகியவை உண்மையானவை என்று கருதி முடிவெடுக்க வேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
இன்ஃபோசிஸ் நிகர லாபம் 6.2% உயர்வு
அடுத்த செய்தி
16 சதவீதம் சரிந்த ஸ்விக்கி பங்குகள் - முதலீட்டாளர்கள் கவலை

தொடர்புடைய செய்திகள்