Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திடீரென பாமாயில் கொள்முதல் அதிகரிப்பு - என்ன காரணம்?

திடீரென பாமாயில் கொள்முதல் அதிகரிப்பு - என்ன காரணம்?

ஆகஸ்டில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி முந்தைய மாதத்தை விட 7 சதவீதம் உயர்ந்து 7.83 லட்சம் டன்னாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

புதுடெல்லி:

சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து, இந்திய நிறுவனங்கள் பாமாயில் கொள்முதலை அதிகரித்துள்ளன. பண்டிகை மற்றும் திருமண கால தேவையை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் கையிருப்பை உயர்த்தி வருகின்றன.
2024-25-ல் இந்தியா இறக்குமதி செய்த 160.72 லட்சம் டன் சமையல் எண்ணெயில் பாமாயில் மட்டும் 75.17 லட்சம் டன்னாக இருந்தது. அதே நேரத்தில் உள்நாட்டு கச்சா பாமாயில் உற்பத்தி 3.80 லட்சம் டன் மட்டுமே என்பதால், பாமாயிலுக்கான இந்தியாவின் இறக்குமதி சார்பு இன்னும் மிக அதிகமாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான கச்சா பாமாயிலை வாங்கியுள்ளதாக பதஞ்சலி ஃபுட்ஸ் துணைத் தலைவர் ஆஷிஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். வரி குறைப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கான செலவு குறைந்துள்ளது.
இந்தியா வழக்கமாக மாதத்துக்கு 5 லட்சம் முதல் 6.5 லட்சம் டன் வரை பாமாயில் இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் விலை மேலும் குறைந்தால், பண்டிகை காலத்தில் மாதாந்திர இறக்குமதி 7.5 லட்சம் டன் வரை உயர வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு செப்டம்பர் 23-ம் தேதி கச்சா பாமாயில் மற்றும் கச்சா சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது. கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.
இதர வரிகளையும் சேர்த்தால், கச்சா பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான மொத்த இறக்குமதி வரி 16.5 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கான மொத்த வரி 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க தரவின்படி, ஆகஸ்டில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி முந்தைய மாதத்தை விட 7 சதவீதம் உயர்ந்து 7.83 லட்சம் டன்னாக இருந்தது. சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 26 சதவீதம் அதிகரித்து 6.29 லட்சம் டன்னாக உயர்ந்தது.
அதே நேரத்தில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 36 சதவீதம் குறைந்து 1.61 லட்சம் டன்னாக இருந்தது. ஆகஸ்டில் இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 15.72 லட்சம் டன்னாக பதிவானது.
இந்தியா தனது தாவர எண்ணெய் தேவையில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. வரி குறைப்பு மற்றும் பாமாயில் விலை சரிவு காரணமாக வரும் மாதங்களிலும் இறக்குமதி அதிகரிக்கலாம். இந்தியாவின் கூடுதல் கொள்முதல், மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் பாமாயில் ஏற்றுமதிக்கும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
India faces stiff challenge to attract capital flows
அடுத்த செய்தி
ஆவின் நெய், வெண்ணெய் உற்பத்தி பாதிப்பு? வலுக்கும் கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்