Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எல் அண்ட் டி நிறுவனத்துக்கு பிரம்மாண்ட ஒப்பந்தங்கள்

எல் அண்ட் டி நிறுவனத்துக்கு பிரம்மாண்ட ஒப்பந்தங்கள்

எல் அண்ட் டி நிறுவனம் ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரையிலான மதிப்புப் பிரிவில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

எல் அண்ட் டி நிறுவனத்தின் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகப் பிரிவு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரையிலான மதிப்புப் பிரிவில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.

மின் பரிமாற்றக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மின்தொகுப்புடன் இணைக்கவும் இத்திட்டங்கள் உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் 380 கிலோவோல்ட் மின் பரிமாற்றப் பாதைகள், துணை மின் நிலையங்கள் தொடர்பான பணிகள் கிடைத்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 132/11 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கேபிள் பணிகளுக்கான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.


இந்தியாவில், விசாகப்பட்டினத்தில் மின் பரிமாற்றப் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்கள் அடங்கிய கட்டமைப்பை அமைக்க முன்னணி தனியார் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் கிடைத்துள்ளது.


பல்வேறு நாடுகளில் சிக்கலான மின் கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனத்தின் திறனை இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படுத்துவதாக இப்பிரிவின் தலைவர் ஜோஜி செபாஸ்டியன் தெரிவித்தார். மின் கட்டமைப்பு மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி
6 மடங்கு பெருகிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
அடுத்த செய்தி
சென்செக்ஸ் 685 புள்ளிகள் உயர்வு

தொடர்புடைய செய்திகள்