பெங்களூருவைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான டோன்போ இமேஜிங் இந்தியாவின் ரூ.852.18 கோடி மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு 135.9 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
நேற்று நிறைவடைந்த வெளியீட்டில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர் பிரிவு 293.56 மடங்கும், நிறுவனமல்லாத முதலீட்டாளர் பிரிவு 170.94 மடங்கும் சந்தா பெற்றன. சில்லறை முதலீட்டாளர் பிரிவில் சுமார் 31 மடங்கு விண்ணப்பங்கள் பதிவாகின. பங்கின் விலை வரம்பு ரூ.665 முதல் ரூ.700 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.பங்கு ஒதுக்கீடு அக்டோபர் 21-ம் தேதியும், பங்குச்சந்தைப் பட்டியலிடல் அக்டோபர் 23-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த வெளியீடு முழுவதும் ஏற்கெனவே உள்ள பங்குதாரர்களின் பங்கு விற்பனையாகும். இதனால் நிறுவனத்துக்கு நேரடியாகப் புதிய மூலதனம் கிடைக்காது.