Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிகர லாபம் 29% உயர்வு

பஜாஜ் ஃபைனான்ஸ் நிகர லாபம் 29% உயர்வு

இரண்டாவது காலாண்டில் மட்டும் ரூ.37,680 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 29 சதவீதம் அதிகரித்து ரூ.6,367 கோடியாக உயர்ந்துள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை தலைமையிடமாகக் கொண்ட பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.4,944 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இந்நிலையில், இந்தாண்டு நிகர வட்டி வருவாய், நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அதிகரிப்பு ஆகியவை லாப வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

நிறுவனத்தின் முக்கிய வருவாயான நிகர வட்டி வருவாய் (NII) கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.10,785 கோடியாக இருந்தது. இது தற்போது 23.6 சதவீதம் அதிகரித்து ரூ.13,335 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த நிகர வருவாய் 23 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.15,974 கோடியாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு , முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 26 சதவீதம் அதிகரித்து ரூ.5.85 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டாவது காலாண்டில் மட்டும் ரூ.37,680 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் 1.34 கோடி புதிய கடன்களை பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வழங்கப்பட்ட 1.21 கோடி கடன்களுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீத வளர்ச்சியாகும். இந்தக் காலாண்டில் புதிதாக 44.20 லட்சம் வாடிக்கையாளர்களை நிறுவனம் இணைத்துள்ளது. இதன்மூலம் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12.88 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத உயர்வாகும்.

நிறுவனத்தின் சொத்து தரம் வலுவாக இருந்தபோதிலும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் வாராக்கடன் விகிதம் சற்று அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன் (Gross NPA) விகிதம் ஜூன் காலாண்டில் 0.96 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 1.06 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர வாராக்கடன் (Net NPA) விகிதமும் 0.39 சதவீதத்திலிருந்து 0.42 சதவீதமாக அதிகரித்துள்ளது.எனினும், கடந்த ஆண்டு இதே காலத்தில், மொத்த வாராக்கடன் விகிதம் 1.24 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.60 சதவீதமாகவும் இருந்தன. அதனோடு ஒப்பிடுகையில், வாராக்கடன் விகிதங்கள் குறைந்துள்ளன.

கடன் இழப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள் 4 சதவீதம் அதிகரித்து ரூ.2,166 கோடியாக உள்ளன. இதில் நிர்வாகம் மற்றும் பொருளாதாரச் சூழல் தொடர்பான அபாயங்களுக்காக ரூ.337 கோடி கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதனைத் தவிர்த்துப் பார்த்தால், கடன் இழப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள் 12 சதவீதம் குறைந்து ரூ.1,829 கோடியாக உள்ளன. நடப்பு நிதியாண்டில் 6 கோடி முதல் 6.2 கோடி வரை புதிய கடன்களை வழங்கவும், 1.8 கோடி முதல் 2 கோடி வரை புதிய வாடிக்கையாளர்களை இணைக்கவும் பஜாஜ் ஃபைனான்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 150 முதல் 175 புதிய கிளைகள் அல்லது செயல்பாட்டு மையங்களைத் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

முந்தைய செய்தி
உஷா நிறுவனத்தின் புதிய மின்விசிறிகள் - விலை எவ்வளவு தெரியுமா?
அடுத்த செய்தி
கனமழை எச்சரிக்கை - இன்றைய நிலவரம்!

தொடர்புடைய செய்திகள்