ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 8.4 சதவீதம் சரிந்து ரூ.221 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.241.32 கோடியாக இருந்தது.
செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.484 கோடியானது. மொத்த செலவுகள் ரூ.191 கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.230 கோடியை எட்டின.
நிர்வாகத்தின் கீழுள்ள காலாண்டு சராசரி சொத்து மதிப்பு 4 சதவீதம் உயர்ந்து ரூ.4.42 லட்சம் கோடியாக இருந்தது. இத்தகவல்களை நிறுவனம் பங்குச்சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது.மும்பை பங்குச்சந்தையில் நேற்று நிறுவனப் பங்கு விலை 0.57 சதவீதம் குறைந்து ரூ.954.10 ஆக வர்த்தக முடிவில் நிலைபெற்றது. வருவாய் உயர்ந்தபோதிலும் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.