நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், செப்டம்பர் காலாண்டில் ரூ.13,884 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 15 சதவீதம் அதிகம் என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.12,075 கோடியாகவும், முந்தைய ஜூன் காலாண்டில் ரூ.13,349 கோடியாகவும் இருந்தது. செயல்பாட்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 11.22 சதவீதம் உயர்ந்து ரூ.73,188 கோடியானது. முந்தைய ஜூன் காலாண்டின் வருவாய் ரூ.72,275 கோடியாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்தின் மொத்த செலவுகள் செப்டம்பர் காலாண்டில் ரூ.55,887 கோடியாக உயர்ந்தன. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் செலவுகள் ரூ.49,463 கோடியாகவும், முந்தைய ஜூன் காலாண்டில் ரூ.55,231 கோடியாகவும் இருந்தன. கடந்த மூன்று மாதங்களில் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை நிகர அடிப்படையில் 4,258 அதிகரித்துள்ளது.
இதையடுத்து, செப்டம்பர் 30 நிலவரப்படி மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,98,056 ஆனது. முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, பிஎஸ்இயில் டிசிஎஸ் பங்கு 0.42 சதவீதம் சரிந்து ரூ.2,075.25-க்கு நிறைவடைந்தது. அதே நாளில் பங்குச்சந்தையின் குறியீடு 1.44 சதவீதம் சரிவை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.