Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பி.எஃப் கணக்கில் இருந்து யுபிஐ மூலம் பணம் எடுக்க புதிய வசதி

பி.எஃப் கணக்கில் இருந்து யுபிஐ மூலம் பணம் எடுக்க புதிய வசதி

பி.எஃப். உறுப்பினர்கள் 12 இலக்க தனித்துவ யுஏஎன் மூலம் ஆன்லைனில் பணம் எடுப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

பி.எஃப். கணக்கில் இருந்து யுபிஐ மூலம் நேரடியாக பணம் பெறும் புதிய வசதியை இபிஎஃப்ஓ சோதனை செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் நாடு முழுவதும் மொத்தம் 36 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரத்தில், தொடர்ந்து பங்களிப்பு செய்து வரும் செயலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய நடைமுறையில், பி.எஃப். உறுப்பினர்கள் 12 இலக்க தனித்துவ யுஏஎன் மூலம் ஆன்லைனில் பணம் எடுப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கை நடைமுறை முடிந்த பிறகு, இபிஎஃப்ஓ அந்த தொகையை உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பும். பின்னர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கு மூலம் பயன்படுத்த முடியும்.


புதிய வசதி குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கிகளுடன் இணைந்து யுபிஐ மூலம் பி.எஃப். பணத்தை எடுக்கும் வசதி தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.இதன் மூலம் பி.எப் உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்புநிதிக் கணக்கில் உள்ள தகுதியான தொகையை யுபிஐ வாயிலாக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய நடைமுறையில், யுஏஎன் எண் மற்றும் உறுப்பினர்களின் யுபிஐ கணக்குகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பி.எஃப். தொகையைப் பெறுவதற்கான நடைமுறை மேலும் எளிமையாகும்.


புதிய வசதியின் கீழ், விதிமுறைகளுக்கு உட்பட்டு பி.எஃப். கணக்கில் உள்ள தொகையில் அதிகபட்சம் 75% வரை யுபிஐ மூலம் பெற முடியும் தற்போதைய விதிகளின்படி, உறுப்பினரின் பி.எஃப். கணக்கில் குறைந்தபட்சம் 25% தொகை தொடர்ந்து இருக்க வேண்டும். கல்வி, திருமணம், வீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான குறிப்பிட்ட பிரிவுகளில், தகுதியான பி.எஃப். தொகையில் 75% வரை முன்கூட்டியே பெறுவதற்கு அனுமதி உள்ளது.


இதற்காக இபிஎஃப்ஓ புதிய செயலியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த செயலி உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்படும். மேலும், பீம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளுடனும் இது இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவசரத் தேவைகளுக்காக பணம் எடுக்க விரும்பும் உறுப்பினர்கள், விரைவாக, எளிதாக பணத்தை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
செப்டம்பர் காலாண்டில் ரூ.13,884 கோடி நிகர லாபம் ஈட்டிய டிசிஎஸ்
அடுத்த செய்தி
மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜயை சந்தித்த கடற்படைத் தலைவர்

தொடர்புடைய செய்திகள்