Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Shellz India ஐபிஓ தொடக்கம்

Shellz India ஐபிஓ தொடக்கம்

இந்நிறுவனம் 'ஹக்ஸ்', 'டோஸ்கா' ஆகிய பிராண்டுகளில் சாக்லேட் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வகையான இனிப்புப் பொருட்களைத் தயாரித்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இனிப்பு மற்றும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான ஷெல்ஸ் இந்தியா லிமிடெட்டின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) நேற்று (அக் 15) தொடங்கியது. இதன் மூலம் ரூ.59.97 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஐபிஓ அக்டோபர் 19-ம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.170 முதல் ரூ.179 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33,50,400 புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. குறைந்தபட்ச விண்ணப்ப அளவு 1,600 பங்குகளாகும். இதற்கான முதலீடு ரூ.2.86 லட்சம் வரை இருக்கும். பங்குகள் பிஎஸ்இ எஸ்எம்இ தளத்தில் பட்டியலிடப்பட உள்ளன.

ஷெல்ஸ் இந்தியா நிறுவனம் 'ஹக்ஸ்', 'டோஸ்கா' ஆகிய பிராண்டுகளில் சாக்லேட், பிஸ்கெட், ஜெல்லி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வகையான இனிப்புப் பொருட்களைத் தயாரித்து வருகிறது. டெல்லி மற்றும் ஹரியானாவின் சோனிபட்டில் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.

ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், நடைமுறை மூலதனத் தேவைகளுக்கும், நிறுவன விரிவாக்கத்துக்கும் பயன்படுத்தப்படும்.
சோனிபட் ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறனை 17,100 டன்னிலிருந்து 34,500 டன்னாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2025–26 நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.192.62 கோடியாகவும், நிகர லாபம் ரூ.13.37 கோடியாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்–ஜூன் காலாண்டில் ரூ.47.24 கோடி வருவாயும், ரூ.4.08 கோடி நிகர லாபமும் ஈட்டியுள்ளது.

உள்நாட்டுச் சந்தையுடன் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நிறுவனம் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

முந்தைய செய்தி
IDBI வங்கி பங்கு 7.5% சரிவு - ஃபேர்ஃபாக்ஸ் ஒப்பந்த எதிரொலி
அடுத்த செய்தி
பங்குச் சந்தையில் கிடுகிடு உயர்வு: 5 காரணங்களால் உயர்ந்த SENSEX!

தொடர்புடைய செய்திகள்