Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

IPO நிதி பயன்பாட்டுக்கு கட்டாய கண்காணிப்பு: SEBI பரிந்துரை

IPO நிதி பயன்பாட்டுக்கு கட்டாய கண்காணிப்பு: SEBI பரிந்துரை
பகிரவும் WhatsApp Facebook

ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு மூலம் நிறுவனங்கள் திரட்டும் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க செபி புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது. கண்காணிப்பு அமைப்புகளுக்கு ஒத்துழைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பங்கு வெளியீட்டின் தொகை எவ்வளவாக இருந்தாலும் கண்காணிப்பு அமைப்பை நியமிக்க வேண்டும். நிறுவனங்கள் தேவையான தகவல்களையும் ஆவணங்களையும் வழங்காவிட்டால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்பு அமைப்புகள் அறிக்கை தயாரித்து, நேரடியாகப் பங்குச் சந்தைகளிடம் அளிக்கலாம்.


ஒவ்வொரு ஒத்துழையாமை நிகழ்வுக்கும் அபராதம் விதிக்கப்படும். அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் நிறுவனம் குறைபாடுகளைச் சரிசெய்து, முழு அறிக்கையை அளித்து, அபராதத்தைச் செலுத்த வேண்டும். தவறினால் நிறுவனர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். மேலும் 10 நாட்களுக்குப் பிரச்சினை தொடர்ந்தால், அவர்களின் டீமேட் கணக்குகளை முடக்கும் நடவடிக்கை தொடங்கப்படும்.

பிரச்சினை தீரும் வரை கண்காணிப்பு அமைப்பை மாற்ற முடியாது. முழுத் தகவல்கள் கிடைத்ததும் 15 நாட்களுக்குள் திருத்தப்பட்ட அறிக்கை அளிக்க வேண்டும்.
இந்த அறிக்கைகளைப் பங்குச் சந்தைகள் தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும். முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் நிதிப் பயன்பாட்டை நேரடியாக அறிய இது உதவும்.

இவை இன்னும் இறுதி விதிகளாகவில்லை. பொதுமக்கள் நவம்பர் 3 வரை கருத்துகளைத் தெரிவிக்கலாம். அவற்றின் அடிப்படையில் செபி அடுத்தகட்ட முடிவை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
கனரா வங்கியின் நிகர லாபம் 8.40%-ஆக உயர்வு
அடுத்த செய்தி
Groww நிகர லாபம் 54 சதவீதம் உயர்வு!

தொடர்புடைய செய்திகள்