Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐபிஓ-க்கு தயாராகும் இந்திய ஏஐ நிறுவனங்கள்

ஐபிஓ-க்கு தயாராகும் இந்திய ஏஐ நிறுவனங்கள்

இந்த 71 நிறுவனங்களில் 25 முதல் 50 சதவீதம் வரை அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடுகளை மேற்கொள்வதன் மூலம், அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட ஏஐ நிறுவனங்களின் சந்தை மதிப்பு 50 முதல் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகரிக்கலாம் என்று ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

ஏஐ துறையுடன் குறிப்பிடத்தக்க தொடர்புடைய 84 தனியார் இந்திய நிறுவனங்களை கோல்ட்மேன் சாக்ஸ் அடையாளம் கண்டுள்ளது. இவற்றின் தற்போதைய மொத்த மதிப்பு சுமார் 55 பில்லியன் டாலராகும். இதில், வளர்ச்சி உள்ளிட்ட முதலீட்டு நிலைகளில் உள்ள 71 நிறுவனங்களின் மதிப்பு 54 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 71 நிறுவனங்களில் 25 முதல் 50 சதவீதம் வரை அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம். அவற்றின் பொதுப்பங்கு வெளியீட்டு மதிப்பு தற்போதைய மதிப்பைவிட சராசரியாக நான்கு மடங்கு இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பட்டியலிடுதல்கள் தரவு மையங்கள், நிறுவனங்களுக்கான ஏஐ சேவைகள், உரையாடல் ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு மேலாண்மை மற்றும் மருத்துவ ஏஐ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சந்தையை மேலும் விரிவுபடுத்தக்கூடும்.

இந்திய ஏஐ புத்தொழில் நிறுவனங்களுக்கான தனியார் பங்கு முதலீடு 2024-ல் 1.6 பில்லியன் டாலராக இருந்தது. இது 2025-ல் சுமார் ஐந்து பில்லியன் டாலராக உயர்ந்தது. 2026-ம் ஆண்டின் முதல் எட்டு முதல் ஒன்பது மாதங்களிலேயே முந்தைய ஆண்டின் முழு முதலீட்டு அளவு எட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த தனியார் பங்கு முதலீட்டில் ஏஐ துறையின் பங்கு 2024-ல் ஐந்து சதவீதத்திலிருந்து 2026-ல் சுமார் 20 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

முந்தைய செய்தி
ஆறு வார உச்சத்தை எட்டியது ரூபாய்
அடுத்த செய்தி
நியூசிலாந்துக்கு பின்னலாடை ஏற்றுமதி 3 மடங்கு உயர வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்