Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

L&T நிறுவனத்தில் 5 புதிய வாரியங்கள்

L&T நிறுவனத்தில் 5 புதிய வாரியங்கள்

கடந்த நிதியாண்டில் எல் அண்ட் டி நிறுவனத்தின் வருவாய் ரூ.2.86 லட்சம் கோடியாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

நாட்டின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி (L&T), ஆண்டுதோறும் 12 முதல் 15 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்கும் நோக்கில் புதிய நிறுவனக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அந்நிறுவனத்தின் இயக்குநரும், உற்பத்தி பிரிவின் மூத்த செயல் துணைத் தலைவருமான அனில் பரப் தெரிவித்துள்ளார்.


உள்கட்டமைப்பு, எரிசக்தி (ஹைட்ரோகார்பன்), பயன்பாட்டுத் துறைகள் மற்றும் உலோகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் தொழில்நுட்ப உற்பத்தி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கு இந்த வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரியத்திலும் ஆறு முதல் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இவை நிறுவனத்தின் பல்வேறு வணிகப் பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்பட்டு, முக்கிய முடிவுகள் மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், எதிர்காலத் தேவைகளுக்கு நிறுவனத்தைத் தயார்படுத்துதல் ஆகியவையும் இவற்றின் முக்கியப் பணிகளாகும். கடந்த நிதியாண்டில் எல் அண்ட் டி நிறுவனத்தின் வருவாய் ரூ.2.86 லட்சம் கோடியாக இருந்தது.


 நடப்பாண்டு ஏப்ரல் முதல் 2031 மார்ச் வரையிலான ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு வணிகப் பிரிவும் தனது வருவாய் மற்றும் செலவுக் கணக்குகள், திட்டச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து பொறுப்பேற்கும் என்று அனில் பரப் தெரிவித்துள்ளார்.


முந்தைய செய்தி
₹110 cr speciality block nearing completion at government hospital
அடுத்த செய்தி
சிலர் பணம் பெறுவது உண்மைதான்; எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் வினோத் தகவல்

தொடர்புடைய செய்திகள்