Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

13 பங்குகளில் முக்கிய மாற்றங்கள் - எதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

13 பங்குகளில் முக்கிய மாற்றங்கள் - எதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

இந்திய பங்குச்சந்தையில் அக்டோபர் 5 முதல் 9-ம் தேதி வரையிலான வாரத்தில் 13 நிறுவனங்களின் பங்குகள் ‘எக்ஸ்-தேதி’க்கு செல்கின்றன.

பகிரவும் WhatsApp Facebook

மும்பை:

இந்திய பங்குச்சந்தையில் அக்டோபர் 5 முதல் 9-ம் தேதி வரையிலான வாரத்தில் 13 நிறுவனங்களின் பங்குகள் டிவிடெண்ட், போனஸ் பங்கு, பங்கு பிரிப்பு, நிறுவனப் பிரிப்பு மற்றும் பங்கு திரும்ப வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ‘எக்ஸ்-தேதி’க்கு செல்கின்றன.
அக்டோபர் 5-ம் தேதி பொதுத்துறை சுரங்க நிறுவனமான என்எம்டிசி பங்கு, ஒரு பங்குக்கு ரூ.1 இறுதி டிவிடெண்டுக்கான எக்ஸ்-தேதியை அடைகிறது. அதே நாளே பதிவு தேதியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 6-ல் பிஎல்எஸ் இ-சர்வீசஸ் நிறுவனத்தின் ரூ.10 முகமதிப்புள்ள ஒரு பங்கு, ரூ.5 முகமதிப்புள்ள இரண்டு பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது. வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு வணிகப் பிரிவை தனியாகப் பிரிக்கும் நடவடிக்கைக்கும் அன்றே எக்ஸ்-தேதி வருகிறது.
அக்டோபர் 7-ல் ஜிடிவி இன்ஜினீயரிங் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு போனஸ் பங்குகளை வழங்கும் 2:1 திட்டத்துக்கான எக்ஸ்-தேதியை அடைகிறது. பிடிசி இந்தியா ஒரு பங்குக்கு ரூ.5.50 இறுதி டிவிடெண்ட் வழங்க உள்ளது.


அக்டோபர் 8-ல் சங்கரா பில்ட்புரோவின் ரூ.10 முகமதிப்புள்ள பங்கு ரூ.2 முகமதிப்புள்ள பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது. இதனால் ஒரு பங்குக்கு பதிலாக ஐந்து பங்குகள் கிடைக்கும். ஷார்துல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பங்கு திரும்ப வாங்கும் திட்டத்துக்கும் அன்றே எக்ஸ்-தேதி வருகிறது.
அக்டோபர் 9 அதிக நிறுவன நடவடிக்கைகள் நடைபெறும் நாளாக உள்ளது. அசெல்யா சொல்யூஷன்ஸ் இந்தியா ஒரு பங்குக்கு ரூ.35 இறுதி டிவிடெண்டும், காஸ்பியன் கார்ப்பரேட் சர்வீசஸ் ரூ.0.50 இறுதி டிவிடெண்டும் வழங்குகின்றன.


மோல்ட்-டெக் டெக்னாலஜீஸ் மற்றும் மோல்ட்-டெக் பேக்கேஜிங் ஆகிய இரு நிறுவனங்களும் 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குகின்றன. அதாவது வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் கூடுதலாக ஒரு பங்கு கிடைக்கும்.
மேலும், ஸ்கைவேஸ் ஏர் சர்வீசஸ் ஒரு பங்குக்கு ரூ.0.25 இடைக்கால டிவிடெண்ட் வழங்குகிறது. டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்கு திரும்ப வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்தச் சலுகைகளைப் பெற முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட எக்ஸ்-தேதிக்கு முன்பே பங்குகளை வைத்திருக்க வேண்டும்.

முந்தைய செய்தி
நீடித்த சிக்கல்கள்! சென்னை மாநகராட்சிக்கு மாறிய அண்ணா சாலை பராமரிப்பு பொறுப்பு
அடுத்த செய்தி
‘நறுமுகை’ இ-காமர்ஸ் தளம் - டிஜிட்டல் முறையில் அசத்தும் பெண் விவசாயிகள்

தொடர்புடைய செய்திகள்