சில்லறை வர்த்தக நிறுவனமான ஷாப்பர்ஸ் ஸ்டாப், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.3.11 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.20.11 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது.
நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 8.72 சதவீதம் உயர்ந்து ரூ.1,366.27 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வருவாய் 9.7 சதவீதம் உயர்ந்து ரூ.1,389.15 கோடியாக உள்ளது.
உயர்தரப் பொருட்கள் விற்பனை, சரக்கு மேலாண்மை மற்றும் செயல்பாட்டுத் திறன் மேம்பாடு ஆகியவை லாப உயர்வுக்கு உதவியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது காலாண்டின் இறுதிக்குள் கடனற்ற நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளதாக தலைமைச் செயல் அதிகாரி கவிந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.