ஹரியானா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள மானேசரில் 104 அறைகளுடன் கூடிய புதிய ‘வெல்கம்ஹோட்டல்’ அமைக்க ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டெல்லி தலைநகர் பிராந்தியத்தில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி, குருகிராம், நொய்டா, பரிதாபாத் உள்ளிட்ட முக்கிய வர்த்தக மையங்களுடன் சிறந்த போக்குவரத்து இணைப்பு இருப்பதால், தொழில் நிறுவனங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான வாடிக்கையாளர்களை இந்த ஹோட்டல் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி வாய்ப்புள்ள பகுதிகளில் புதிய ஹோட்டல்களைத் தொடங்குவதில் கவனம் செலுத்தி வருவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில் சதா தெரிவித்தார்.
ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் 155-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களையும், 14,200-க்கும் அதிகமான அறைகளையும் கொண்டுள்ளது.