Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போர்க்களத்தில் காயமடைந்த வீரரை ஆளில்லா ட்ரோன் மூலம் மீட்ட உக்ரைன்

போர்க்களத்தில் காயமடைந்த வீரரை  ஆளில்லா ட்ரோன் மூலம் மீட்ட உக்ரைன்
போர்க்களத்தில் காயமடைந்த உக்ரைன் வீரரை, மீட்டு தூக்கி வரும் ட்ரோன்

உக்ரைனின் 30-வது தனி இயந்திரமய காலாட்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர், போர்க்களத்தில் காயமடைந்து சிக்கியிருந்தார்.

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யாவுடனான போரில் காயமடைந்த வீரரை, ஆளில்லா பறக்கும் ட்ரோன் மூலம் போர்க்களத்திலிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

தரைவழியாகச் சென்று மீட்பது மிகவும் ஆபத்தான சூழலில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளில் புதிய முயற்சியாகப் பார்க்கப்படும் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்த வீரர்களை மீட்பதில் உக்ரைன் ராணுவம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.

உக்ரைனின் 30-வது தனி இயந்திரமய காலாட்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர், போர்க்களத்தில் காயமடைந்து சிக்கியிருந்தார். அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் அதிகமாக இருந்ததுடன், ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலும் நிலவியது. இதனால், வழக்கமான முறையில் தரைவழியாகச் சென்று அவரை மீட்பது கடினமாக இருந்தது.
இதையடுத்து, உக்ரைனின் 92-வது தாக்குதல் படைப்பிரிவைச் சேர்ந்த ட்ரோன் நிபுணர்கள், காயமடைந்த வீரரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக, அதிக எடையைத் தூக்கிச் செல்லக்கூடிய ஆறு சுழலிகளைக் கொண்ட ட்ரோன் பயன்படுத்தப்பட்டது.

வெளியாகியுள்ள வீடியோவில், ட்ரோன் தரையிறங்கியதும் காயமடைந்த வீரர் அதனுடன் தன்னைப் பாதுகாப்பாக இணைத்துக் கொள்கிறார். பின்னர், ட்ரோன் அவரை மேலே தூக்கிக்கொண்டு ஆபத்தான பகுதியிலிருந்து வெளியேறுகிறது. தொடர்ந்து, பாதுகாப்பான இடத்தில் அவரைத் தரையிறக்குகிறது.

இந்த மீட்பு நடவடிக்கைக்கான திட்டமிடல் பல நாட்கள் நடைபெற்றதாகவும், மீட்புப் பயணம் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட வீரர் தற்போது மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், ஆளில்லா ட்ரோன் மூலம் இத்தகைய மீட்புகளை மேற்கொள்வதில் ஆபத்துகள் இருப்பதால், இது வழக்கமான மீட்பு முறைக்கு மாற்றாக அமையுமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.


முந்தைய செய்தி
Google rolls out new Gemini tools to help small businesses
அடுத்த செய்தி
Over 100 Japanese companies set up, expand GCCs in India

தொடர்புடைய செய்திகள்