2016-ம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ரஷ்யா தலையிட்டது தெளிவாகத் தெரிகிறது என்று பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
பதவியேற்றதும் இது குறித்து விசாரித்ததாகவும், ரஷ்யாவின் தலையீடு இருந்தது எனத் தெளிவான பதில் கிடைத்ததாகவும் அவர் கூறினார். ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் வாக்காளர்களும் வெளிநாட்டுத் தலையீடு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.எனினும், தலையீடு தொடர்பான ஆதாரங்களையோ, அதன் அளவு குறித்த விவரங்களையோ அவர் வெளியிடவில்லை. ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.