Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் சிதைவுகள் - எங்கு தெரியுமா?

4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் சிதைவுகள் - எங்கு தெரியுமா?
எகிப்தில் கெகோவா தீவு அருகே கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 4,700 ஆண்டுகள் பழமையான மண் பானை.

4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் சிதைவுகள் துருக்கி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

எகிப்தின் கிசா பெரிய பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும், சுமார் 4,400 முதல் 4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் சிதைவுகள் துருக்கி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா மாகாணத்தின் கெகோவா தீவு அருகே கடலுக்கு அடியில் பழமையான கப்பல் சிதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட நீருக்கடி தொல்லியல் ஆய்வில், வெண்கலக் காலத்தின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த மண் பானைகள் மற்றும் பொருட்களைச் சேமிக்கும் பெரிய மட்பாண்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.


சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கப்பல் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மரத்தால் செய்யப்பட்ட கப்பலின் உடற்பகுதி காலப்போக்கில் சிதைந்துவிட்டது. எனினும், கடலடியில் கிடைத்த மட்பாண்டங்களின் வடிவமைப்பு மற்றும் அவற்றின் தன்மையை ஆய்வு செய்து அதன் காலத்தைத் தீர்மானித்துள்ளனர்.


இந்தப் பானைகள் ஆலிவ் எண்ணெய் அல்லது மதுவைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில பானைகளில் காணப்படும் தனித்துவமான குறியீடுகள், அக்கால மக்களின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் தகவல்களை வழங்கக்கூடும்.
இந்தக் கப்பல் மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள லெவண்ட் கடற்கரைப் பகுதியிலிருந்து புறப்பட்டு, இன்றைய துருக்கியில் உள்ள டிராய் நகரம் அல்லது கிரீட்டுத் தீவை நோக்கிச் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


இந்தக் கண்டுபிடிப்பு, பழங்கால கடல் வணிகப் பாதைகள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகளைப் புரிந்துகொள்ள உதவும். இருப்பினும், இதன் காலக்கணிப்பு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


முந்தைய செய்தி
இரட்டை நிலைப்பாடு கூடாது: ஐ.நா.வுக்கு இந்தியா எச்சரிக்கை
அடுத்த செய்தி
மின் பயன்பாட்டைக் கண்காணிக்க புதிய செயலி

தொடர்புடைய செய்திகள்