Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பனி படர்ந்த சாலைகளில் கார் ஓட்ட ஆர்வம் காட்டும் செல்வந்தர்கள்

பனி படர்ந்த சாலைகளில் கார் ஓட்ட  ஆர்வம் காட்டும் செல்வந்தர்கள்
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள பனி படர்ந்த பிக் ஸ்கை மலைப்பகுதி.

மூன்று நாள் நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

பனி படர்ந்த சாலைகளில் வாகனம் ஓட்டுவதைப் பலரும் தவிர்க்கும் நிலையில், உறைந்த ஏரிகளிலும் பனித்தடங்களிலும் சொகுசுக் கார்களை ஓட்டுவதற்காகச் செல்வந்தர்கள் பல ஆயிரம் டாலர்களைச் செலவிடுகின்றனர். ஓட்டுநர் திறனை மேம்படுத்துவதுடன், வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தைப் பெறுவதும் இவர்களின் நோக்கமாக உள்ளது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் நடைபெற்ற ‘எஃப்ஏடி இன்டர்நேஷனல் ஐஸ் ரேஸ்’ நிகழ்ச்சியில் பெராரி, லம்போர்கினி, போர்ஷே, பென்ட்லி உள்ளிட்ட கார்கள் பனித்தடத்தில் சீறின. மூன்று நாள் நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வார இறுதி விஐபி தொகுப்புக்கான கட்டணம் 3,800 டாலரை எட்டியது.


ஸ்வீடனில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கும் மூன்று இரவுகள் கொண்ட பயிற்சிக்கு 4,690 யூரோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெர்சிடீஸ் நிறுவனத்தின் நான்கு நாள் பயிற்சிக்கு 4,500 யூரோ வசூலிக்கப்படுகிறது. பின்லாந்தில் போர்ஷே வழங்கும் 2027ஆம் ஆண்டுக்கான பனி ஓட்டுநர் அனுபவத் தொகுப்புகள் சுமார் 17,000 யூரோவாக உள்ளன.
வழக்கமான பனிச்சறுக்குச் சுற்றுலாவுக்கு மாற்றாக இத்தகைய பயணங்களை நாடுவோர் அதிகரிப்பதாகச் சுற்றுலா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

ஹன்டர்மாஸ் நிறுவனத்தின் ஏழு நாள் பயணத்துக்கு ஒருவருக்கு 19,490 யூரோ கட்டணம். இதுகுறித்த விசாரணைகள் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளன.
வேகமாகச் செல்வதைவிட, குறைந்த பிடிப்புள்ள மேற்பரப்பில் காரின் எடை, சமநிலை, பிரேக் மற்றும் திருப்பங்களைக் கட்டுப்படுத்துவதே முக்கியம் எனப் பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர். மாறும் தடநிலைக்கு ஏற்ப டயர்களைத் தேர்ந்தெடுப்பதும் அவசியமாகிறது.


சிறப்பு டயர்களுக்கே தலா 2,000 டாலர் வரை செலவாகலாம். பனித்தடங்களில் பிடிப்பு குறைவதால், ஓட்டுநர்கள் ஸ்டீயரிங், பிரேக், ஆக்சிலரேட்டர் ஆகியவற்றைத் தொடர்ந்து நுட்பமாகக் கையாள வேண்டியுள்ளது. பயிற்றுநர்களுடன் பயிற்சி பெறும் வாய்ப்பும் இத்தொகுப்புகளில் இடம்பெறுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிக் ஸ்கையில் நடைபெறும் பந்தயத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. ஒருநாள் பொதுநுழைவுக் கட்டணம் 199 டாலரிலும், விஐபி அனுமதி 1,560 டாலரிலும் தொடங்குகிறது.



முந்தைய செய்தி
மேகமலை புலிகள் காப்பகம் விவகாரம்: தமிழக அரசு அடுத்த நடவடிக்கை
அடுத்த செய்தி
பூமியின் முதல் உயிர்களின் கதை சொல்லும் கற்கள் - அழியும் அபாயத்தில் அரிய சுவடுகள்

தொடர்புடைய செய்திகள்