Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெண்களுக்கான சிறந்த 10 பணியிடங்கள் - உங்க ஆஃபிஸ் லிஸ்ட்டில் இருக்கா?

பெண்களுக்கான சிறந்த 10 பணியிடங்கள் - உங்க ஆஃபிஸ் லிஸ்ட்டில் இருக்கா?

இந்தியாவில் பெண்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற சிறந்த பணியிடங்களின் பட்டியலை கிரேட் பிளேஸ் டூ வொர்க் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இதில் தொழில்நுட்பம், காப்பீடு, விருந்தோம்பல், சில்லறை வர்த்தகம் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதற்கான அங்கீகாரம் பெற மொத்தப் பணியாளர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும். மேலும், நிறுவனத்தின் பணிச்சூழல் குறித்த பெண்களின் கருத்துகளை மதிப்பிடும் ‘டிரஸ்ட் இன்டெக்ஸ்’ (Trust Index) ஆய்வில் குறைந்தபட்சம் 70 சதவீதம் நேர்மறையான கருத்துகளைப் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

1. ஆக்சென்ச்சர் சொல்யூஷன்ஸ் :
டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 நிறுவனங்களில் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக ஆக்சென்ச்சர் உள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம் 3,69,444 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.
2. எடல்வைஸ் லைஃப் இன்சூரன்ஸ்:
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எடல்வைஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2,565 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் ஆயுள் காப்பீட்டுத் துறையில் செயல்பட்டு வருகிறது.
3. எச் அண்ட் ஆர் பிளாக் (இந்தியா) :
திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தில் 1,122 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். வரி கணக்கீடு மற்றும் நிதிச் சேவைகள் வழங்கும் துறையில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
4. ஹாரிசன்ஸ் மலையாளம் :
கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தில் 3,011 ஊழியர்கள் உள்ளனர். தோட்டப் பயிர்கள் மற்றும் வேளாண் பொருட்கள் உற்பத்தி தொடர்பான துறையில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
5. ஹில்டன் :
உலகளாவிய விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த ஹில்டன் நிறுவனத்தில், 3,861 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவுக்கான இதன் தலைமையகம் குருகிராமில் அமைந்துள்ளதாகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6. மேரியட் ஹோட்டல்ஸ் இந்தியா :
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மேரியட் ஹோட்டல்ஸ் இந்தியா நிறுவனத்தில் 29,060 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
7. மிட்லாண்ட் கிரெடிட் மேனேஜ்மென்ட் இந்தியா :
என்கோர் கேப்பிட்டல் குழுமத்தின் ஓர் அங்கமான மிட்லாண்ட் கிரெடிட் மேனேஜ்மென்ட் இந்தியா நிறுவனத்தில் 2,911 ஊழியர்கள் உள்ளனர். இதன் தலைமையகம் குருகிராமில் அமைந்துள்ளது.
8. ரிலையன்ஸ் ரீடெய்ல் :
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் 1,30,457 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
9. சாஜிலிட்டி இந்தியா :
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட சாஜிலிட்டி இந்தியா நிறுவனத்தில் 18,293 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சுகாதாரத் துறைக்கான தொழில்நுட்பம் சார்ந்த வணிகத் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
10. சின்க்ரோனி இன்டர்நேஷனல் சர்வீசஸ் :
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தில் 5,521 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நுகர்வோர் நிதிச் சேவைகளை வழங்கும் சின்க்ரோனி நிறுவனக் குழுமத்தின் ஓர் அங்கமாக இது செயல்பட்டு வருகிறது.

இது தவிர, டாப் 50 பட்டியலில், சென்னையை தலைமையிடமாக கொண்ட ஏஜிஎஸ் ஹெல்த், கார் டெக்னாலஜிஸ், விர்டுசா கன்சல்டிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களும், டாப் 100 பட்டியலில், அஸ்பயர் சிஸ்டம்ஸ், அஸ்ட்ராஜெனெகா இந்தியா, லூகாஸ் டிவிஎஸ், ஸ்ரீ காவேரி மெடிக்கல் கேர், சதர்லேண்ட் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
முந்தைய செய்தி
ரயில்வே நிலங்களில் சரக்கு கையாளும் மையங்கள் - அழைப்பு விடுக்கும் ரயில்வே!
அடுத்த செய்தி
Trump makes a faux pas

தொடர்புடைய செய்திகள்