Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளிக்குள் தங்கம் ஆடப்போகும் ஆட்டம்- மக்களே.. இதுதான் சரியான நேரம்

தீபாவளிக்குள் தங்கம் ஆடப்போகும் ஆட்டம்- மக்களே.. இதுதான் சரியான நேரம்

இந்திய மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது 4.4 மடங்கு அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தங்கம் விலை செப்டம்பர் மாதம் குறைந்தது போல் அக்டோபர் மாதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதத்தின் முதல் நாளே கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 14,924 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில்,தங்கம் விலை சரிவை பயன்படுத்தி நீண்ட கால அடிப்படையில் தங்கம் வாங்குவோருக்கு பெரும் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தற்போது தசரா, அட்சய திருதியை, தீபாவளி ஆகிய 3 முக்கிய பண்டிகை வரும் காரணத்தினால் அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை தீபாவளிக்கு பெரும் திருப்பத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏமன் மற்றும் சவுதி அரேபியா இடையே நடந்து வரும் அண்மைய கால மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இதனால் பணவீக்கம் அதிகரித்து, அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் உயர்ந்துள்ளது. இவை தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்துள்ளன.

இதற்கிடையில், டாலரின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. டாலர் வலுவடையும் போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இயல்பாகவே குறைந்து வருகிறது. எனவே, தங்கம் விலை மேலும் சரிவை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனையொட்டி, தங்கம் விலை அதிகப்படியாக 1,50,610 ரூபாய் வரையில் உயரும், விலை குறைந்தால் 1,46,245 ரூபாய் வரையில் சரியலாம் என கூறப்படுகிறது.

இதில் மேலும் கவனிக்கத்தக்கது என்னவென்றால், 2024 ஜூலையில் 1.24 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தங்க அடகுக் கடன் மதிப்பு, 2025ல் 2.06 லட்சம் கோடி ரூபாயாகவும், 2026 ஜூலையில் 5.52 லட்சம் கோடி ரூபாயாகவும் பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்திய மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது 4.4 மடங்கு அதிகரித்துள்ளது.

தேசிய அளவில் வழங்கப்படும் மொத்தத் தங்கக் கடன்களில் 70 விழுக்காட்டை தென்னிந்திய மாநிலங்கள்தான் பெறுகின்றன. அதில் தமிழ்நாடு 30 விழுக்காடு பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா 15.9 விழுக்காட்டுடனும், கர்நாடகா 10.2 விழுக்காட்டுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
Trainer arrested under Pocso Act in Hosur
அடுத்த செய்தி
வெறும் ரூ1.க்கு விற்கப்பட்ட கதர் வேட்டி - குவிந்த மக்கள் கூட்டம்

தொடர்புடைய செய்திகள்