Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதிய கிடுக்குப்பிடி! வாட்ஸ்அப் சேவைக்குக் கட்டணம்! யாருக்கெல்லாம் தெரியுமா?

புதிய கிடுக்குப்பிடி! வாட்ஸ்அப் சேவைக்குக் கட்டணம்! யாருக்கெல்லாம் தெரியுமா?
வாட்ஸ் அப்

வாட்ஸ்அப் பிசினஸ் தளத்தில் வாடிக்கையாளர் சேவை தொடர்பான செய்திகளுக்கு இன்று முதல் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

வாட்ஸ்அப் பிசினஸ் தளத்தில் வாடிக்கையாளர் சேவை தொடர்பான செய்திகளுக்கு இன்று முதல் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் வாடிக்கையாளர் தொடர்புக்கு வாட்ஸ்அப்பை அதிக அளவில் பயன்படுத்தி வரும் நிறுவனங்களுக்கு புதிய செலவுச் சுமை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் முதலில் நிறுவனத்துக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிய பிறகு, அதற்கு நிறுவனங்கள் அளிக்கும் பதில்கள் ‘சேவை செய்திகள்’ எனப்படுகின்றன. வாடிக்கையாளர் ஒரு செய்தியை அனுப்பியவுடன் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை கால அவகாசம் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் ஊழியர்கள், தானியங்கி அமைப்புகள் அல்லது மூன்றாம் தரப்பு ஏஐ கருவிகள் மூலம் நிறுவனங்கள் பதிலளிக்கலாம். கடந்த செப்டம்பர் 30 வரை இத்தகைய சேவை செய்திகளுக்கு மெட்டாவின் செய்திக் கட்டணம் விதிக்கப்படவில்லை. நேற்று முதல் மாதத்திற்கு முதல் 1,000 செய்திகள் மட்டுமே இலவசமாக இருக்கும்.

புதிய கட்டண முறையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனத்தின் வாட்ஸ்அப் வணிக தொலைபேசி எண்ணுக்கும் மாதந்தோறும் 1,000 ‘சேவை செய்திகள்’ இலவசமாக வழங்கப்படும். இந்த வரம்பைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு செய்திக்கும் ரூ.0.115 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தச் சேவைகளுக்கு செய்திகளின் எண்ணிக்கை அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்படாது.

மேலும், ஆர்டர் உறுதிப்படுத்தல், பணம் செலுத்தியதற்கான தகவல், பொருள் அனுப்பப்பட்ட விவரம், டெலிவரி கண்காணிப்பு போன்ற பரிவர்த்தனை சார்ந்த ‘யுடிலிட்டி’ (Utility) செய்திகளுக்கும் இந்தியாவில் ஒரு செய்திக்கு ரூ.0.115 கட்டணம் வசூலிக்கப்படும். 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை காலகட்டத்துக்குள் அனுப்பப்படும் சில யுடிலிட்டி செய்திகளுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதனால் அதிக எண்ணிக்கையிலான தானியங்கி தகவல்களை அனுப்பும் இ-காமர்ஸ் நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் தகவல் தொடர்பு செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஓடிபி-க்கும் கட்டணம்

அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்பு தொடர்பான செய்திகள், குறிப்பாக ஓடிபி உள்ளிட்ட செய்திகளுக்கு ஒரு செய்திக்கு ரூ.0.115 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் செய்திகளுக்கு ஒரு செய்திக்கு ரூ.0.8631 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் மெட்டா நிறுவனத்தின் தளக் கட்டணங்களாகும். வரிகள் மற்றும் மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் பிசினஸ் சேவை வழங்குநர்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணங்கள் இதில் சேர்க்கப்படாமல் இருக்கலாம்.

இந்தக் கட்டண மாற்றம் வாட்ஸ்அப் பிசினஸ் தளத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பும் வழக்கமான பயனர்களுக்கு பாதிப்பு இருக்காது.

முந்தைய செய்தி
5ஜி-யை விட கவனம் ஈர்க்கும் 4ஜி ஸ்மார்ட் போன்கள்! காரணம் இதுதான்!
அடுத்த செய்தி
பாஞ்சி பாயுது பட்டம்! சரசரவென குறைந்த நூல் விலை! வெளியான குஷி நியூஸ்!

தொடர்புடைய செய்திகள்