Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஈரானுக்கு எதிராக ராட்சத வெடிகுண்டு: அமெரிக்க ராணுவம் பரிசீலனை

ஈரானுக்கு எதிராக ராட்சத வெடிகுண்டு: அமெரிக்க ராணுவம் பரிசீலனை
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் மிகச் சக்திவாய்ந்த அணு ஆயுதமல்லாத குண்டுகளில் ஒன்றான ‘மதர் ஆஃப் ஆல் பாம்ப்ஸ்’ என்றழைக்கப்படும் ராட்சத குண்டு

இந்தக் குண்டு நிலத்துக்கு மேலுள்ள கட்டமைப்புகளையும் சுரங்கப்பாதைகளையும் தாக்குவதற்கே முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

பகிரவும் WhatsApp Facebook

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்க, உலகின் மிகச் சக்திவாய்ந்த அணு ஆயுதமல்லாத குண்டுகளில் ஒன்றான ‘மதர் ஆஃப் ஆல் பாம்ப்ஸ்’ ஆயுதத்தைப் பயன்படுத்த அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. ஆனால், மலைகளுக்கு அடியில் அமைந்துள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை இந்தக் குண்டால் முற்றிலும் அழிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவிடம் உள்ள ஜிபியு-43/பி (GBU-43/B) என்ற குண்டு, ‘மதர் ஆஃப் ஆல் பாம்ப்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. சுமார் 9,800 கிலோ எடையுள்ள இந்தக் குண்டு, ஒரே நேரத்தில் மிகப்பெரிய பரப்பில் கடுமையான வெடிப்பு அதிர்வுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது. செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மூலம் இலக்கை நோக்கிச் செலுத்தப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதை வளாகத்தைத் தாக்க அமெரிக்கா இந்தக் குண்டை முதன்முறையாகப் போரில் பயன்படுத்தியது.
தற்போது ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி வளாகம் மற்றும் ‘பிக்காக்ஸ் மவுண்டன்’ எனப்படும் மலைப்பகுதியில் அமைந்துள்ள நிலத்தடி கட்டமைப்புகள் அமெரிக்காவின் கவனத்தில் உள்ளன.

ஆனால், இந்தக் குண்டு நிலத்துக்கு மேலுள்ள கட்டமைப்புகளையும் சுரங்கப்பாதைகளையும் தாக்குவதற்கே முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடினமான பாறைகள், தடிமனான கான்கிரீட் பாதுகாப்புகளை ஊடுருவிச் செல்லும் திறன் குறைவானது.

இதற்கு மாறாக, சுமார் 13,600 கிலோ எடையுள்ள ஜிபியு-57 (GBU-57) என்ற ‘பங்கர் பஸ்டர்’ குண்டு ஆழமான நிலத்தடி இலக்குகளைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தால் மட்டுமே புதிய தாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படும். எனினும், இத்தகைய தாக்குதலால் ஈரானின் அணுசக்தித் திறனை முழுமையாக அழிக்க முடியாது என்றும், போர் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 

முந்தைய செய்தி
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை
அடுத்த செய்தி
Over 1.6 lakh staff to conduct population enumeration

தொடர்புடைய செய்திகள்